அரைசதம் அடித்த சுப்மன் கில்.. இலக்கை நெருங்கிவிட்ட இந்தியா..!
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி 257 என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது,.
முன்னதாக வங்கதேச அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்த நிலையில் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோகித் சர்மா 48 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதனை அடுத்து தற்போது சுப்மன் கில் மற்றும் விராட் கோஹ்லி ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர். சற்றுமுன் சுப்மன் கில் 50 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் இந்திய அணி சற்று முன் வரை 19 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 31 ஓவர்கள் மீதம் இருக்கையில் 9 விக்கெட் கையில் இருக்கையில் 127 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்பதால் இந்திய அணி இந்த போட்டிகள் மிக எளிதாக வென்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran