புவனேஷ்குமார் விளையாட மாட்டார் – கேப்டன் கோலியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

kohli
Last Updated: திங்கள், 17 ஜூன் 2019 (11:46 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று உலக ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவருக்கு 336 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் இரண்டாவதாக பாகிஸ்தான் பேட்டிங் செய்த போது இந்திய வேகபந்து வீச்சாளர் புவனேஷ்குமார் பந்து வீசினார். வேகமாக வீசிய போது அவரது இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு முதலுதவி செய்யப்பட்டது.

தற்போது அவருக்கு தசைப்பிடிப்பு சரியாகாத நிலையில் இருப்பதால் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. எனவே தொடர்ந்து சில ஆட்டங்களில் புவனேஷ்குமார் விளையாட மாட்டார். அவருக்கு பதிலாக முகம்மது சமி விளையாடுவார் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :