என்ன இந்த அடி அடிக்கிறாய்ங்க – மிரண்டு போன வெஸ்ட் இண்டிஸ்

west indies
Last Updated: வெள்ளி, 14 ஜூன் 2019 (18:56 IST)
இன்றைய உலக கோப்பை ஆட்டத்தில் வெஸ்ட் இண்டிஸும் இங்கிலாந்தும் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

பேட்டிங் செய்ய ஆரம்பித்ததில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் திணற தொடங்கிவிட்டது. 2 ஓவர்கள் முடிந்த நிலையில் வெறும் 2 ரன்களே எடுத்திருந்தது. 8 பந்துக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த துவக்க பேட்ஸ்மேன் லெவிஸை 2 ரன்களோடே விக்கெட் ஆக்கி அனுப்பிவிட்டது இங்கிலாந்து. தாமதமாக விளையாடினாலும் நிக்கோலஸ் பூரான் அரைசதம் வீழ்த்தி வெற்றி வாய்ப்பை கொஞ்சம் ஏற்படுத்தி கொடுத்தார். ஓவர் முடியப்போகும் தருணத்தில் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாட தொடங்கினர். 39 ஓவரில் 202 ரன் எடுத்திருந்த வெஸ்ட் இண்டீஸை அடுத்தடுத்து ஒரு ரன் கூட எடுக்கவிடாமல் விக்கெட்டை வீழ்த்தியது இங்கிலாந்து. ஒரு ரன் கூட அடிக்கவிடாமல் இப்படி போட்டு அடிக்கிறாங்களே என ஆடிப்போயிருக்கிறது வெஸ்ட் இண்டிஸ்.

இங்கிலாந்தின் அபாரமான பந்துவீச்சாலும், வெஸ்ட் இண்டீஸின் மோசமான ஆட்டத்தாலும் 44 ஓவர்களிலேயே மொத்த விக்கெட்டும் சரிந்து ஆட்டம் முடிந்தது. 212 ரன்கள் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் எடுத்துள்ள நிலையில் 213 ரன்களை இலக்காக வைத்து இங்கிலாந்து களம் இறங்கியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :