திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 9 மார்ச் 2023 (17:07 IST)

4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 255 ரன்கள் சேர்ப்பு!

India -australia test
இன்றைய 4 வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், டிராவிஸ் 32 ரன்களும், மயூஸ் 3 ரன்களும், பீட்டர் 17 ரன்களுடனும் ஸ்மித் 38 ரன் களும் அடித்து அவுட்டாகினர்.

தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் சதம் கடந்து 104 ரன்களுடனும்,மேகரூன் 49 ரன்களுடனும்  விளையாடி வருகின்றனர்.

 இன்றைய ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு  255 ரன் கள் எடுத்துள்ளது.

இந்திய அணிதரப்பில், ஷமி 2 விக்கெட்டுகளும்,  அஷ்வின் 1 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.