திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 8 மார்ச் 2023 (15:35 IST)

விடுதலை படத்தின் டிரைலர் & பாடல்கள் வெளியீடு பற்றி வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய  விடுதலை படம் இந்த ஆண்டு ரிலிஸாக உள்ளது. படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். இந்நிலையில் ஷுட்டிங் முடிந்து தற்போது பின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. படத்தின் டப்பிங் சமீபத்தில் நடந்து முடிந்தன. படத்தில் இடம்பெற்றுள்ள இளையராஜா இசையில் சுகா எழுதிய ஒன்னோட நான் நடந்தா பாடல் தனுஷ் குரலில் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் இசை மற்றும் பாடல்கள் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்தவகையில் இப்போது டிரைலர் மற்றும் பாடல்கள் இணையத்தில் இரவு 8 மணிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.