படுக்கையறை காட்சியால் பேசாமல் போன பிரபல நடிகரின் மனைவி


Abimukatheesh| Last Updated: திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (18:44 IST)
படுக்கையறை காட்சிகளில் நடித்த பிறகு என் மனைவி என்னிடம் இரண்டு நாட்கள் பேசாமல் இருந்தார் என பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக் கூறினார்.

 

 
நவாஸுத்தீன் சித்திக் நடித்துள்ள பாபுமோஷாய் பந்தூக்பாஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 48 இடங்களில் கத்திரி போட சென்சார் போர்டு உத்தரவிட்டது. அந்த அளவுக்கு படத்தில் ஆபாச காட்சிகள் இருந்ததாம். இந்த படம் வருகிற 25ஆம் தேதி வெளியாக உள்ளது.
 
இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட நவாஸுத்தீன் சித்திக்கிடம் படுக்கையறை காட்சியில் நடித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது:-
 
நான் படுக்கையறை காட்சியில் நடித்ததை அறிந்து என் மனைவி இரண்டு நாட்கள் என்னுடன் பேசவே இல்லை. அதன் பிறகு ஒரு வழியாக சமாதானம் செய்தேன் என்றார்.
 
இந்த பாபுமோஷாய் பந்தூக்பாஸ் திரைப்படம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :