Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிரதமர் மோடி ‘சீட்பெல்ட்‘ தலைவர். விமர்சனம் செய்த நடிகை ரம்யாவுக்கு பதிலடி கொடுத்த நடிகரின் மனைவி


sivalingam| Last Modified புதன், 9 ஆகஸ்ட் 2017 (07:19 IST)
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள ஊடக பிரிவு பொறுப்பாளரும் முன்னாள் எம்பியும், நடிகையுமான ரம்யா சமீபத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சித்தும், ராகுல் காந்தியை புகழ்ந்தும் ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். அதில், ‘‘ராகுல் காந்தி மக்களின் தலைவர், பிரதமர் மோடி ‘சீட்பெல்ட்‘ தலைவர்’’ என்று கூறப்பட்டு இருந்தது.


 
 
இந்த கருத்துக்கு கன்னட நடிகர் கணேஷின் மனைவி தனது ஃபேஸ்புக்கில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் 'குஜராத்தை சேர்ந்த உங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு வாழ்க்கை வாழ பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதிக்கு வந்து தங்கினர். அதை பற்றி நீங்கள் பேசவில்லை. இப்போது ஒன்றும் தெரியாதவர் போல் நீலி கண்ணீர் வடிக்கிறீர்கள்.
 
இதை மக்கள் நம்ப மாட்டார்கள். உங்களுடைய ராகுல் காந்தி உண்மையிலேயே குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் உட்கார்ந்து குறை கேட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உங்களின் மண்டியாவுக்கு ராகுல் காந்தி வந்தபோது போலியாக விவசாயிகளை கண்டுபிடித்து கதை கட்டினீர்கள். இதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. 3 முறை முதல்–மந்திரியாக இருந்து ஆட்சி புரிந்துவிட்டு இப்போது மோடி பிரதமராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவருக்கு நீங்கள் பாடம் நடத்த தேவை இல்லை. நீங்கள் உங்களுடைய வேலையை சரியாக பாருங்கள்' என்று கூறியுள்ளார். ரம்யா, கணேஷ் மனைவி மோதலால் ஃபேஸ்புக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :