உலகக்கோப்பை கிரிக்கெட் 2019: இந்தியா Vs தென்னாப்பிரிக்கா - இந்தியாவுக்கு இலக்கு 228 ரன்கள் #Live

icc world cup
Last Updated: புதன், 5 ஜூன் 2019 (21:18 IST)
எட்டு ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறும் ஷிகர் தவான்
 
உலகக்கோப்பை தொடரில் இன்று தென்னாப்பிரிக்காவை, தனது முதல் போட்டியில் எதிர்கொள்கிறது இந்திய அணி.
இரண்டாவது இன்னிங்சில் 23 ஓவர்கள் முடிவில் இந்தியா இரண்டு விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக 18 ரன்கள் எடுத்த நிலையில் அணித்தலைவர் விராட் கோலி ஆட்டமிழந்தார்.
 
தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் எட்டு ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இப்போது ரோஹித் சர்மா அரைசதம் அடித்து நிதானமாக ஆடி வருகிறார். ராகுல் (11) எதிர்முனையில் விளையாடி வருகின்றனர்.
 
50 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி பந்தில் தென்னாப்பிரிக்காவின் 9வது ஆட்டக்காரர் அவுட் ஆனார்.
 
முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
 
 
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 227 ரன்களை குவித்தது.
 
இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது. இந்த முதல் இன்னிங்சின் முக்கிய நிகழ்வுகள் சில
 
தென் ஆபிரிக்கா அணியின் தடுமாற்றம்
 
தொடக்கத்திலிருந்தே தென்னாப்பிரிக்கா அணி இந்திய பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள தடுமாறியது. முதலில் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி வீரர் ஹாசிம் ஆம்லா மற்றும் டீ காக் இருவரும் சற்று மந்தமாகவே ஆட்டத்தை தொடங்கினர்.
 
அடுத்து வந்த வீரர்களும் அதிரடியில் இறங்காமல் மந்தமாகவே விளையாடினர். அடுத்து அடுத்து விக்கெட்கள் வீழ தென் ஆப்ரிக்க வீரர்களின் தடுமாற்றம் அதிகமானது.
 
அதிக விக்கெட் இழப்பு
 
தென்னாப்பிரிக்க அணியில் 20 ஓவருக்குள் 4 விக்கெட்டுகள் சரிந்தன. இது அந்த அணிக்கு மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. 100 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளின் இழப்பு அணியின் பலத்தை குறைத்து விட்டது. அடுத்த அடுத்த விக்கெட்டுகளை சிறப்பாக வீழ்த்தினார் இந்திய பந்து வீச்சாளர்கள்.
 
சாஹலின் வியூகம்
இந்திய அணியில் அதிகபட்சமாக யுவேந்திர சாஹல் 60 பந்துகளில் 51 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரின் அற்புதமான பந்து வீச்சில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளசிஸை வீழ்த்தி ரன்களை கட்டுப்படுத்தியுள்ளார்.
 
பும்ராவின் ஆட்டம்
 
இந்திய பந்து வீச்சாளர் பும்ரா 10 ஓவர்களில் வெறும் 35 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு நம்பிக்கை சேர்த்துள்ளார்.
 
ஒரே ஓவர் விக்கெட்டுகள்
 
20வது ஓவரின்போது முதல் பந்தில் சாஹல் வான்டெர் டுசெனை போல்ட் செய்தார். அதே ஓவரின் இறுதி பந்தில் டு பிளஸிஸையும் போல்ட் செய்தார். இவரை போல கடைசி ஓவர் வீசிய புவனேஷ்வர் குமார் ஓவரின் இரெண்டாவது பந்தில் மோரிசையும் கடைசி பந்தில் தாஹிரையும் வீழ்த்தினார்.
 
கிறிஸ் மொரிஸின் நிதானம்
 
தென்னாப்பிரிக்க அணியில் மோரிஸ் ஓரளவுக்கு அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 42 ரன்கள் குவித்து அணியின் ரன்களை உயர்த்தினார். முதலில் ஃபெலக்வாயோவுடன் சேர்ந்து ஆடிய அவர், பின்னர் ரெபாடாவுடன் சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்
 
ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 4வது ஓவர் 2வது பந்தில் அமலா அவுட் ஆனார்.
 
ஆறாவது ஓவர் 5வது பந்தில் டி காக் வெளியேறினார். 24 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்கா இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களை இழந்து தடுமாறியது.
 
அடுத்து வந்த அணியின் தலைவர் டு பிளாசிஸ் நிலைத்து நின்று 38 ரன்கள் எடுத்தார். அவருக்கு இணையாக ஆடிவந்த வான்டர் டுசென் 22 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
 
கூடிய சீக்கிரம் டு பிளாசிஸூம் வெளியேற தென்னாப்பிரிக்காவின் ரன் குவிப்பில் வீழ்ச்சி கண்டது.
 
நிலைத்து நின்று மெதுவாக ஆடிய டேவிட்ட மில்லர் 31 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அவரோடு இணைந்த ஃபெலக்வாயோ 34 ரன்கள் வரை தாக்குபிடித்தார்.
 
அவரும் வெளியேறிய பின்னர், கிறிஸ் மோரிஸ், ரேபாடா நிலைமையை புரிந்து கொண்டு மெதுவாக தென்னாப்பிரிக்காவின் ரன்களை உயர்த்த தொடங்கினர்.
 
டோனியின் தலைசிறந்த ஸ்டம்பிங் மூலம் ஃபெலக்வாயோ வெளியேறினார்.
இந்தியாவின் கிரிக்கெட் வீரர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிக்காட்டினர். வேகபந்து வீச்சாளர் பும்ரா 10 ஓவர்கள் விசி 35 ரன்கள் வழங்கி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
புவனேஸ் குமார் 10 ஓவர்கள் வீசி 44 ரன்களை வழங்கி 22 விக்கெட் எடுத்தார். 10 ஓவர்கள் வீசிய குல்திப் ஜாதவ் 46 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார்.
 
10 ஓவர்கள் வீசிய சுழல்பந்துவீச்சாளர் 51 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இவர் இன்னொரு விக்கெட் எடுத்திருந்தால், அது உலகப்பதிவாக இருந்திருக்கும்.
 
1983ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்றபோது நடந்ததைபோல இந்தியாவின் சுழல் பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகளை அதாவது 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர் என்று இந்த போட்டி பற்றி டெஸ்ட் மேச் சிறப்பு புள்ளிவிவர நிபுணர் ஆன்டி சால்ஸ்மேன் தெரிவித்துள்ளார்.
 
36வது ஓவரில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஃபெலக்வாயோ 34 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். ஏற்கெனவே இரண்டு விக்கெட்டுகளை எடுத்த சுழல் பந்துவீச்சாளர் சாஹல், டேவிட் மில்லரையும், ஃபெலக்வாயோயும் வெளியேற்றினார்.
 
சாஹல் 5 விக்கெட்டுகள் எடுத்தால், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வரலாற்று பதிவாக இருக்கும்.
 
இந்திய அணக்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்கள்
வான்டெர் டுசன் 22 ரன்கள் எடுத்த நிலையில், யுவேந்திர சாஹல் பந்தில் வெளியேறினார். ஃபாப் டு பிளசிஸ் 38 ரன்கள் எடுத்த நிலையில் 4வது விக்கெட்டாக பெவிலியனுக்கு அனுப்பப்பட்டார். 5வது விக்கெட்டாக டுமினி lbw முறையில் குல்தீபால் வெளியேற்றப்பட்டார்.
 
தென்னாப்பிரிக்கா முதலில் மட்டை பிடித்து ஆடியபோது, மிக குறைவான ஸ்கோர் 149. அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 1992ம் ஆண்டு உலகக்கோப்பையில் 190 எடுத்தது.
 
20வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்கா இழந்தது.
 
தடுமாறும் ஃபாப் டு பிளசிஸ்
ஃபாப் டு பிளசிஸூக்கு கடும் நெருக்கடியை வழங்கி, விராட் கோலி சிறப்பாக தலைமை தாங்கி வருகிறார் என்று முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் மைக்கேல் வேகன் பராட்டியுள்ளார்.
 
 
உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா Vs தென்னாப்பிரிக்கா - இந்தியாவுக்கு நல்தொடக்கமாக இருக்குமா? | விரிவாக படிக்க - https://bbc.in/2HWiAGH | #INDvSA | #TeamIndia |
 
 
 
டாஸில் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தை பும்ரா வீச ஆம்லா ரோகித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதன் மூலம் இந்தியா தனது விக்கெட் வேட்டையை துவக்கியது.
 
 
ஆட்டத்தின் ஆறாவது ஓவரில் தென்னாப்பிரிக்காவின் மற்றொரு தொடக்க வீரரான டீ காக் விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார்.
 
143 கி.மீ வேகத்தில் வந்த பந்தை கோலியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார் டீ காக். அவர் 17 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார்.
 
எட்டு ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 31 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
 
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ராய்னா இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் பதிவிட்டுள்ளார்.
 
புகைப்பட காப்புரிமை @[email protected]
பும்ரா 4 ஓவர்கள் பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.
 
டு பிளசிஸ் இந்தியாவுக்கு எதிராக இதுவரை 13 இன்னிங்ஸ்களில் 658 ரன்களை எடுத்திருக்கிறார். இரண்டு சதமும் விளாசியுள்ளார்.
 
அணி வீரர்கள்
 
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், , லோகேஷ் ராகுல், தோனி , கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், பும்ரா, புவனேஷ்வர் குமார்.
 
தென்னாப்பிரிக்கா : ஃபாப் டு பிளசிஸ் (கேப்டன்), குயின்டன் டீ காக், ஹாஷிம் ஆம்லா , வான்டெர் டுசன் , டுமினி , ஷம்சி, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், ஃபெலக்வாயோ, ககிசோ ரபாடா , இம்ரான் தாஹிர்.
 
 
புள்ளிப்பட்டியலில் பின் தங்கியிருக்கும் தென்னாப்பிரிக்கா
 
தென்னாப்பிரிக்கா ஏற்கனவே இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் பின்தங்கி இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவுடன் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது.
 
இந்நிலையில், இந்திய அணி உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் துவங்கவேண்டும் என எண்ணுகிறது.
 
தென்னாப்பிரிக்க அணிக்கு ஃபாப் டு பிளசிஸ் தலைமை தாங்குகிறார். இந்தியா அணிக்கு விராட் கோலி தலைமை தாங்குகிறார்.
 
சவுதாம்ப்டனில் இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.
 
ஹாம்ப்ஷெர் பவுல் மைதானத்தில்தான் இந்தியா, தென்னாப்பிரிக்கா போட்டி நடைபெறுகிறது. இந்த இடம் நகரிலிருந்து சற்று தொலைவில் உள்ளது.
 
"மக்கள் இந்த மைதானத்திற்காகதான் இவ்வளவு தொலைவு வருகின்றனர். மலைகள் சூழ்ந்த இந்த பகுதியில் முன்பு மக்கள் வசிக்கவில்லை. ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது." என்கிறார் என்னை மைதானத்தின் அருகே இறக்கி விட்ட ஓட்டுநர்.
 
மாபெரும் விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. ஆனால், அது குறித்த எந்த தடையங்களும் இல்லை. இந்த மேட்ச் குறித்த சில பதாகைகள் மட்டும் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் கடந்து இந்த மைதானத்திற்கென ஒரு வரலாறு உள்ளது.
 
ஹாம்ப்ஷெர் (அ ) ரோஸ் பவுலில் முதல் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி 2003ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே இடையே நடந்தது. இதுவரை நடந்த 23 போட்டிகளில், 12 முறை முதலில் பேட்டிங் செய்தவர்களே வென்றிருக்கிறார்கள், ஒரு முறை வெற்றி தோல்வி இல்லாமல் ஆட்டம் முடிந்திருக்கிறது.
 
உலகக்கோப்பையின் முதல் போட்டியை தென்னாப்பிரிக்காவுடன் இந்த மைதானத்தில் ஆடும் இந்தியா, வெற்றி வாகை சூடவே விரும்பும். வெற்றியுடன் தங்கள் கணக்கை தொடங்க அவர்கள் விரும்புவார்கள். ஆனால், தரவுகள் வேறுவிதமாக உள்ளன.
 
2015ம் ஆண்டை தவிர உலகக் கோப்பையின் எந்த தொடரிலும் முதல் சில போட்டிகளில் இந்தியா சரியாக விளையாடியதில்லை. இந்தியா கோப்பையை வென்ற 2011 மேட்ச் ஆகட்டும், இறுதி வரை சென்ற 2003 மேட்ச் ஆகட்டும், இந்தியா உலக கோப்பையில் எப்போதும் சொதப்பலில்தான் தொடங்கி இருக்கிறது.
 
செளதாம்டனில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் தலா மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளன.
 
தென்னாப்பிரிக்கா இரண்டு முறை வென்றுள்ளது. இங்கிலாந்திடம் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் ஒரு முறை தோல்வியை தழுவி உள்ளது.
 
மறுபுறம் இந்தியா இரண்டு முறை இங்கிலாந்திடம் தோல்வியுற்றுள்ளது. கென்யாவை ஒரே ஒரு முறை வென்றுள்ளது.
World Cup Cricket 2019 ,India vs South Africa,  India target 228 runs, Live,இந்தியா இலங்கை, கிரிக்கெட், போட்டிகள், தென் ஆப்பிரிக்கா, இந்தியா தென்னாப்பிரிக்கா, உலக கோப்பை


இதில் மேலும் படிக்கவும் :