புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2019 (10:29 IST)

பும்ரா மீது சந்தேகம்; திடீர் ஊக்கமருத்து சோதனைக்கான காரணம் என்ன?

இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு திடீரென ஊக்கமருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
நேற்று சக வீரர்களுடன் பயிற்சியில் இருந்த போது வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை ஊக்கமருந்து தடுப்பு பிரிவினர் சோதனைக்காக அழைத்து சென்றனர். பும்ராவுக்கு இரண்டு கட்டங்களாக சோதனை நடத்தப்பட்டதாம். 
 
முதலில் சிறுநீர் சோதனையும் அதனை தொடர்ந்து 45 நிமிடங்கள் கழித்து ரத்த பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாம். இந்த சோதனை குறித்து வெளியான தகவலை மைதான அதிகாரிகளும், இந்திய கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது. 
சோதனை முடிவுகள் இன்னும் வெளியாகதா நிலையில், நாளை உலக கோப்பை 2019 முதல் போட்டியை விளையாட உள்ள இந்தியாவிற்கு இது கடும் அதிர்ச்சிகரமான செய்தியாகவே உள்ளது. மேலும், மற்ற வீரர் யாருக்காவது இது போன்றி சோதனை மேற்கொள்ளப்பட்டதா என விவரம் ஏதும் வெளியாகவில்லை. 
 
அதோடு பும்ராவுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைக்காக காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.