அதிமுக இணைப்பில் பயனில்லை; பிரிவதே மேல்: தந்திர யுக்தியை துவங்கிய பாஜக மேலிடம்!!


Sugapriya Prakash| Last Updated: ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (10:41 IST)
தமிழகத்தில் இணைப்பால் தங்களுக்கு எந்த ஆதாயமும் இல்லை என நினைப்பதாக டெல்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 
 
அதிமுக மூன்று தலைமையில் மூன்று வெவ்வேறு அணிகளாக சிதறி கிடக்கின்றன. இந்த பிளவை பயன்படுத்தி தமிழகத்தில் தாமரையை மலர வைக்க பாஜக மேலிடம் திட்டம் தீட்டி வருகிறது.
 
சமீபத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் ஒன்றிணைவதற்கான பேச்சுவார்த்தைகளூம் நடைபெற்றது. இதற்கு பாஜக பின்னின்று உதவுவதாக விமர்சனங்களும் எழுந்தது.
 
ஆனால், உண்மையில் பாஜக மேலிடத்தின் திட்டங்கள் வேறு என கூறப்படுகிறது. அது என்னவெனில், அதிமுக அணிகளுக்குள்ளான சண்டைகளை பாஜக தலைமை கவனித்து வருகிறது. அதிமுக அணிகளை இணைப்பதால், தமிழகத்தில் பாஜக காலுன்றும் என்பது வெறும் நம்பிக்கைதான். 
 
ஆனால், இரட்டை இலை சின்னத்தை மொத்தமாக முடக்கிவிட்டால் அதிமுக-வின் வாக்குகள் உடையும். அதன்மூலம், பாஜக வாக்கு சதவீதத்தை அதிகரிக்கலாம் என மனக்கணக்கு போட்டுள்ளனராம்  பாஜக தலைவர்கள். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :