பாஜகவில் இணைய உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்!

பாஜகவில் இணைய உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்!


Caston| Last Modified சனி, 12 ஆகஸ்ட் 2017 (12:32 IST)
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், நெல்லை மாவட்ட முன்னாள் செயலாளருமான நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

 
 
நயினார் நாகேந்திரன் 1989-இல் அதிமுகவின் தன்னை இணைத்துக்கொண்டார். அதிமுகவில் பணகுடி நகரச் செயலாளர், இளைஞரணிச் செயலாளர், திருநெல்வேலி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலாளர், தேர்தல் பிரிவு இணைச்செயலாளர் என பல்வேறு கட்சி பதவிகள் வகித்த நயினார் நாகேந்திரன் 2001-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார்.
 
அப்போது அவருக்கு ஜெயலலிதா அமைச்சர் பதவியை கொடுத்தார். இதன் காரணமாக அதிமுகவில் தென்மாவட்ட செயலாளராக கோலோச்சினார். ஆனால் அதன் பின்னர் 2006 சட்டமன்ற தேர்தலிலும், 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்த நயினார் நாகேந்திரன் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு இருந்தார்.
 
அதன் பின்னர் ஜெயலலிதா மறைவை அடுத்து சசிகலா அவருக்கு கொள்கைபரப்பு துணைச்செயலாளர் பதவியை வழங்கினாலும் அவர் கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் அவர் வரும் 22-ஆம் தேதி தமிழகம் வரும் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :