செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. யோகா
  3. க‌ட்டுரைக‌ள்
Written By Sasikala

ஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்

அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவதுதான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.

 
ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது. மன இறுக்கமும், மனத் தொய்வும், மகிழ்ச்சியின்மையும்  மாற்றுகின்ற ஒரு அரிய மருத்துவ முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
தியானத்தின் போது மனம் மிக நுண்ணியதாகி மேல் மனதிலிருந்து ஆழ் மனதிற்கு ஆல்பா அலைக்கு செல்கிறது, விழிப்புடன் கூடிய ஓய்வு, தூக்க நிலைக்கு மனமும், உடலும் செல்கிறது. அந்த அலையில் இதுவரை மூளையில் உறங்கி கொண்டிருக்கும் கோடிகணக்கான செல்கள் விழிப்படையும். 
 
குறைந்த நேரத்தில் தூக்கத்தை விட ஆழ்ந்த ஓய்வு கிடைக்கிறது. இதயம் நிமிடத்திற்கு 5 முறை தன்னுடைய இயக்கத்தை இயற்கையாக குறைத்து ஓய்வினை அனுபவிக்கிறது, இதனால் இதய கோளாறுகள் தடுக்கபடுகிறது. 
 
ஆழ்நிலை தியானபயிற்சியின் பலன்கள்: 
 
கர்ம வினை கழியும். விரும்பிய நல்ல விளைவுகளை நமக்கு நாமே ஏற்படுத்தி கொள்ளலாம். மனம் தெளிவடையும் அமைதியடையும். ஆத்ம பலம் அதிகரிக்கும். மூளையின் செயல் திறன், அறிவு திறன் அதிகரிக்கும். செய்யும் செயலில் முழு  ஆற்றலுடன் செயல்பட முடியும். புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும். 
 
ஞாபக சக்தி அதிகரிக்கும். ஆக்க பூர்வமான அறிவு மேலோங்கும். மனோவியாதி சீராகும். பயம், கவலை, குழப்பம், மன  உளைச்சல் நீங்குகிறது. ஆளுமை திறன் ஓங்குகிறது.