திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 31 ஜூலை 2017 (17:56 IST)

ஆகஸ்டு மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கறாராகப் பேசி பல காரியங்களை முடிப்பீர்கள்.


 


சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும். வீடு, மனை வாங்குவது விற்பது சுலபமாக முடியும். சகோதர ஒற்றுமை பலப்படும். மாதத்தின் பிற்பகுதியிலிருந்து கண் எரிச்சல், முன்கோபம், வாக்குவாதங்கள், செரிமானக் கோளாறு வந்துப் போகும். 
 
எதிர்மறை எண்ணங்களுடன் பேசுபவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. வேலைச்சுமை, கனவுத் தொல்லை இருக்கும். நீண்ட நாட்களாக பழகிய நண்பர்களுடன் கூட கருத்து மோதல்கள் வரக்கூடும். தொண்டை புகைச்சல் வரும். ஆனால் வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆனால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். 
 
அரசியல்வாதிகளே! அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். 
 
கன்னிப் பெண்களே! நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் செல்வார்கள். வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வந்துப் போகும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். 
 
கலைத்துறையினர்களே! புதிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். சிக்கனமும், சகிப்புத் தன்மையும் தேவைப்படும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 7, 11, 15
அதிஷ்ட எண்கள்: 3, 6
அதிஷ்ட நிறங்கள்: அடர் நீலம், வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்