ஆகஸ்டு மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26


Abimukatheesh| Last Modified திங்கள், 31 ஜூலை 2017 (17:58 IST)
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், உங்களுக்கு இந்த மாதத்தில் தைரியமாக சில பெரிய முடிவுகள் எடுக்கலாம்.

 


சிலர் கொஞ்சம் கடன்பட்டு வீடு, மனை வாங்குவீர்கள். மாதாமாதம் லோன் பெரிய தொகை கட்ட வேண்டி வருகிறதே என்றெல்லாம் கலங்க வேண்டாம். அதற்கான வழி வகைகள் பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். சகோதரங்களின் மனசு மாறும். புது வாகனம் வாங்குவீர்கள். 
 
செலவினங்கள் கூடிக்கொண்டேப் போகும். சில நேரங்களில் எதிர்காலத்தை நினைத்து சின்ன சின்ன பயம் வரும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்கள் காணாமல் போகக்கூடும். குடும்பத்தினருடன் வெளியூர் செல்லும் போது ஆபரணங்களை பாதுக்காப்பான இடத்தில் வைப்பது நல்லது. களவுப் போக வாய்ப்பிருக்கிறது. வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். 
 
அரசியல்வாதிகளே! பரபரப்புடன் காணப்படுவீர்கள். 
 
கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். சக ஊழியர்களின் சம்பள உயர்விற்காக போராடுவீர்கள். 
 
கலைத்துறையினர்களே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். சுபச் செலவுகளும், திடீர் பயணங்களும் அதிகரிக்கும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 8, 14, 15
அதிஷ்ட எண்கள்: 4, 7
அதிஷ்ட நிறங்கள்: அடர்நீலம், இளம்சிவப்பு
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

webdunia

இதில் மேலும் படிக்கவும் :