புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (20:31 IST)

கோத்தபய நாடு திரும்ப இது சரியான நேரம் இல்லை- அதிபர் ரணில் விக்ரமசிங்கே

ranil
கோத்தபய நாடு திரும்ப இது சரியான  நேரம் இல்லை எனவும் அவர் திரும்பி வந்தால் நாட்டில் பதற்ற நிலை அதிகரிக்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார தடையால் சமீபத்தில் அந்த நாட்டில் புரட்சி ஏற்பட்டது. இதில். இலங்கை அதிபர் கோத்தபய வீட்டை மக்கள் சூறையாடினர். மகிந்த ராஜபக்சேவின் வீட்டை தீயிட்டு கொளுத்தினர்.

இதையடுத்து, கோத்தபய நாட்டை விட்டு தப்பியோடினார். அவரது சகோடர்களான, மஹிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே இருவரும் வரும் ஜூலை 28 வரை நாட்டை விட்டு செல்ல உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்தத் தடை ஆகஸ்ட் 2 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய அதிபராக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கே ,கோத்தபய நாடு திரும்ப இது சரியான  நேரம் இல்லை எனவும் அவர் திரும்பி வந்தால் நாட்டில் பதற்ற நிலை அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.