வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 6 நவம்பர் 2024 (11:31 IST)

திருச்செந்தூரில் நாளை கந்தசஷ்டி விழா: பக்தர்கள் குவிந்ததால் கூடுதல் பாதுகாப்பு..!

Tiruchendur
திருச்செந்தூரில் நாளை கந்த சஷ்டி விழா நடைபெற இருப்பதை அடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து உள்ளதாகவும், இதனையடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது கந்த சஷ்டி என்பதும், கடந்த 2ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கிய இந்த விழா 12 நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கந்த சஷ்டி திருவிழாவுக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளதாகவும், கந்த சஷ்டி பாடல் பாடியும், விரதம் இருந்தும், கோலாட்டம் ஆடியும் வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், திருச்செந்தூர் கடலில் சூரசம்ஹாரம் நடைபெற இருக்கும் நிலையில், சூரசம்ஹாரம்  முடிந்ததும் கடலில் புனித நீராடும் நிகழ்வின் போது பக்தர்கள் கடல் அலையில் அடித்துச் செல்லாமல் இருக்க பாதுகாப்பு படை தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் திருக்கல்யாணம் மேடையில் சுப்பிரமணிய சாமிக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Edited by Siva