ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2022 (19:55 IST)

இலங்கை அதிபர் மாளிகையில் திருடிய 3 பேர் கைது...

srilanka
இந்தியாவின் அண்டை நாடாக இலங்கையில் சமீபத்தில், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதில், அதிபர் கோத்தபய, பிரதமர் ராஜபக்சே உள்ளிட்டோர் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களுக்கு எதிராகப் போராட்டிய மக்கள் ஆட்சியாளர்களின்  மாளிகைகளுக்கு மக்கள் தீ வைத்தனர்.

பின்னர், மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு புதிய அதிபராக  ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அடிபர் மாளிகையில் போராட்டக்கார்கள் நுழைந்த போது, அங்கிருந்து 1000க்கும்  மேற்பட்ட பொருட்கள் திருடுபோனதாக கூறப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில், திருடிச் சென்ற பொருட்களை விற்பனை செய்ய முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் திரைச்சீலைகள் தொங்கவிடுவதற்கு வைப்பட்டிருந்த தங்க முலாம் பூசிய 40 கொக்கிகளை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது