திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 8 ஜூலை 2023 (19:39 IST)

மனைவியைக் கொன்று, மூளையை உணவுடன் சேர்த்து தின்ற நபர்!

america
மெக்சிகோவில் ஒருவர் தன் மனைவியைக் கொன்று அவரது மூளையை சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடஅமெரிக்காவில் மெக்சிகோ நகரில் வசித்து வருபவர் அவ்வாரோ(32). இவர்  மூடப்பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், பேய், பிசாசு ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவர், தன் மனைவி மரியா மான்செராட்டை கொன்றதாக தகவல் வெளியான நிலையில், இதுபற்றித் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது, ஒரு பிளாஸ்டிக் பையில் மனித உடலின் சில துண்டுகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதன்பின்னர், அவ்வாரோவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில், ஜூன் 29 ஆம் தேதி சாத்தான் இக்கொலையைச் செய்யச் சொல்லி உத்தரவிட்டதாகவும், அதன்படி தன் மனைவியைக் கொன்றதாகவும், அவரது மூளையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டதாகவும், அவரது தலை மண்டை ஓட்டை எரித்துவிட்டதாகவும் மனைவியின் மற்ற உடல் பாகங்களை அருகில் உள்ள பள்ளத்தாக்கில் போட்டதாகவும் கூறினார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.