திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 26 ஜூன் 2023 (17:34 IST)

அதிக தொண்டர்களை கொண்ட கட்சி அதிமுகவா? திமுகவா?

உலகில் உள்ள பல நாடுகளிலும் பல கட்சிகள் உள்ளன. இவற்றில் எந்தக் கட்சி தொண்டர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதலிடம் பிடித்துள்ளது என்பதை word statistics  நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இப்பட்டியலில் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சிகளில் பாஜக முதலிடத்தையும், பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

அதேபோல் உலகில் அதிக தொண்டர்களைக் கொண்ட கட்சியாக பாஜக என கூறப்பட்டுள்ளது. 2 வதாக சீனாவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி, 3 வதாக அமெரிக்காவைச் சேர்ந்த டெமாகிரெடிக் கட்சியும்,  4 வது இடத்தை இந்திய தேசிய காங்கிரஸும், 5 வது இடத்தை அமெரிக்கக் குடியரசு கட்சி கட்சியும் பிடித்துள்ளது.

இப்பட்டியலில், அதிமுக கட்சி 7 வது இடத்தையும், 9 வது இடத்தை ஆம் ஆத்மி கட்சி மற்றும் 14 வது இடத்தை தெலுங்கு தேசம் கட்சியும் பிடித்துள்ளது.

திமுக கட்சி முதல் 15 இடங்களைப் பிடிக்கவில்லை. வேறு பட்டியலில் இடம்பிடித்துள்ளதா என்று தெரியவில்லை.