1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2017 (07:35 IST)

13 வயது மாணவனுடன் தகாத உறவில் ஈடுபட்ட 44 வயது ஆசிரியை கைது

அமெக்காவில் 13 வயது மாணவனுடன் 44 வயது ஆசிரியை தகாத உறவில் ஈடுபட்டதை மாணவனின் தந்தை கண்டுபிடித்துள்ளார்.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ரேச்சல் கோன்செல்ஸ்(44) என்ற பெண், அங்கிருக்கும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். பள்ளியில் பயிலும் 13 வயது மாணவனுடன் அவருக்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது. ஒரு சமயம் ஆசிரியையும், தனது மகனும் தகாத உறவில் ஈடுபட்டதை நேரில் பார்த்த மாணவனின் தந்தை அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் போலீஸாரிடம் புகார் அளித்தார். விசாரணையில் போலீஸார் மாணவனின் தொலைபேசியை வாங்கி பரிசோதித்தபோது, மாணவனுக்கு ஆசிரியையுடன் இருந்த கள்ள உறவை உறுதி செய்தனர்.
 
இதனைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் மாணவனுடனான உறவை, ஆசிரியை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆசிரியைக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். அமெரிக்காவில் இது போன்ற நிகழ்வுகள் கடந்த ஆண்டை விட 35 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஒரு கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.