மோடியே திரும்பிப் போ - லண்டனிலும் தமிழர்கள் போராட்டம்
பிரதமர் மோடி லண்டன் சென்றுள்ள நிலையில், அங்கிருக்கும் தமிழர்களும் ‘மோடியே திரும்பி செல்’ என்கிற வாசகத்துடன் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை அமைக்காத நிலையில், பிரதமர் மோடி சென்னை வந்த போது, ‘மோடியே திரும்பி செல்’ என்கிற வாசகத்துடன் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். கருப்பு சட்டை அணிந்து, கருப்பு பலூன்களை பறக்க விட்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதேபோல் #Gobackmodi என்கிற ஹேஸ்டேக்கும் டிவிட்டரில் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி சமீபத்தில் லண்டன் சென்றிருந்தார். இன்று லண்டனில் உள்ள ஒரு இடத்திற்கு அவர் செல்வது திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், அந்த இடத்தில் ஆயிரக்கணக்கானோர் திடீரென ஒன்று கூடினர். காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கம் எழுப்பினர். அவர்களி கையில் #Gobakmodi என்கிற வாசகம் எழுதியை பேனர்களை பிடித்திருந்தனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மோடிக்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில், லண்டனிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தியிருப்பது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.