Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அடுத்து மத்தியில் ஆளப்போவது யார்? தீர்மானிக்க போவது எந்த கட்சி?

Last Modified திங்கள், 16 ஏப்ரல் 2018 (12:37 IST)
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரமதர் நரேந்திர மோடியை சமீபகலாமாக நேரடியாக தாக்கி பேசி வருகிறார். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத காரணத்தால், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டார். 
 
தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களை ராஜினாமா செய்ய வைத்ததோடு, மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வட முயற்சித்தார். ஆனால், மக்களைவை அமளியின் காரணமாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. 
 
மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பிக்களை அமளியில் ஈடுபட வைத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இருந்து தன்னை தற்காத்து கொண்டு வருகிறது பாஜக என தெரிவித்தார். 
அடுத்து வரும் 20 ஆம் தேதி அவரது பிறந்தநாள் அன்று உண்ணாவிரதம் இருந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதக அறிவித்துள்ளார். மேலும், சில கருத்துக்களையும் அவர் வெளியிட்டுள்ளார். 
 
சந்திரபாபு நாயுடு கூறியதாவது, மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதையும், அடுத்து யார் பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்பதையும் முடிவு செய்யும் கிங் மேக்கர் கட்சியாக தெலுங்கு தேசம் உருவாகும்.
 
ஆந்திர மாநிலத்தின் நலனுக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் ஆனால், பாஜக தெலுங்கு தேசத்திற்கு துரோகம் செய்துவிட்டது. இனி சமரசம் செய்யாமல், மத்திய அரசை எதிர்ப்பேன் என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :