அத்வானியை அரவணைத்து ஆதரித்த ராகுல்காந்தி! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

Last Modified சனி, 14 ஏப்ரல் 2018 (19:36 IST)
சமீபத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அத்வானியும் கலந்து கொண்டபோது, அத்வானிக்கு அவர் கைகுலுக்காமல் உதாசீனப்படுத்திய சம்பவம் அத்வானி ஆதரவாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அத்வானி, வயது முதிர்வு காரணமாக சிரமத்துடன் நடந்து வந்தார். அப்போது அவரை கைத்தாங்கலாக பிடித்து அணைத்து அழைத்து வந்தார் ராகுல்காந்தி. இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.

அத்வானிக்கு பிரதமர் மோடி ஒரு சீனியர் தலைவர் என்ற முறையில் மரியாதை அளிக்காத நிலையில் எதிர்க்கட்சியை சேர்ந்த அதிலும் பலமுறை அத்வானியை கடுமையாக விமர்சனம் செய்த ராகுல்காந்தி அரவணைத்தது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.


webdunia

இதில் மேலும் படிக்கவும் :