வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 18 அக்டோபர் 2017 (16:25 IST)

சோமாலியா தாக்குதலுக்கு பின் ராணுவம்: சந்தேகிக்கப்படும் ஒருவர்!!

கடந்த வாரம் நடத்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் சோமாலியாவை சேர்ந்த பலர் உயிரிழந்தனர். மேலும் பலர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 
 
சோமாலியாவில் மொகடிசு நகரில் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டதுடன் 500 கும் மேற்பட்டவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
திட்டமிடப்பட்டு, பழிவாங்கும் நடவடிக்கையாகவே இது கருதப்படுவதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, அதில் 3 குழந்தைகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
 
அது மட்டுமின்றி கடந்த 2010 ஆம் ஆண்டு ஓட்டுனர் ஒருவர் சோமாலியா ராணுவத்தில் இணைந்ததாகவும், பின்னர் ராணுவத்தை எதிர்த்து 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத குழுவில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இவரே இந்த தாக்குதலுக்கு முக்கிய புள்ளியாக செயல்பட்டிருக்கலாம் என சோமாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.