திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 6 செப்டம்பர் 2018 (09:51 IST)

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மின்சாரம் துண்டிப்பு; பொதுமக்கள் அவதி

ஜப்பானிலுள்ள ஹொக்கைடோ தீவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ தீவில் இன்று அதிகாலை 6.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பதறி அடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
 
இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
நிலநடுகத்தின் காரணமாக அங்கு விமான சேவைகள், ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.