1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 5 செப்டம்பர் 2018 (21:41 IST)

ஜெயலலிதா கொடுத்த பசுமை வீடுகளுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி தராமல் அலைக்கழிக்கப்படும் கிராம மக்கள்?

ஜெயலலிதா ஆட்சியில் ? ஜெயலலிதா கொடுத்த பசுமை வீடுகளுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி தராமல் அலைக்கழிக்கப்படும் கிராம மக்கள்? கரூர் அருகே பசுமை வீடுகள் பயனாளிகளுக்கு எந்த வித அடிப்படை வசதியும் செய்து தராத நிலையில் தினந்தினம் அள்ளல்பட்டு வரும் மக்கள்.

 
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், கடம்பங்குறிச்சி பஞ்சாயத்திற்குட்பட்ட வன்னியத்தெருவில் வசிக்கும் சுமதி, வையாபுரி, குப்புசாமி, குப்பன், குட்டிப்பையன் ஆகிய 5 பேருக்கும் பசுமை வீடுகள் கொடுக்கப்பட்டு ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது அவரது ஆட்சியில் கொடுக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து சுமார் 2 ½ வருட காலமாகியும், அந்த வீடுகளுக்கு தண்ணீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி ஆகிய எந்த வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை.
 
இந்நிலையில் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வரும் பசுமை வீட்டுப்பயனாளிகள், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனுக்கள் கொடுத்தும் இது நாள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், தற்காலிகமாக இருந்த சாலையில் தன் இடம் என்று கூறி ஒருவர் (கண்ணன்) அபகரித்து விட்டு, அதை தட்டிக்கேட்க சென்றபோது அரிவாள் எடுத்து வந்து அந்த பசுமை வீட்டு பயனாளிகளை வெட்ட சென்றுள்ளார். இந்நிலையில் வாங்கல் காவல்துறையினரிடம் புகார் கொடுத்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தினந்தினம், வீட்டில் வசிப்பவர்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வரும், இவர்களுக்கு இன்று வரை அடிப்படை வசதிகளான மின்சாரம், தெருவிளக்கு, குடிநீர் வசதி, சாலை வசதி என்று எதுவும் செய்து தரவில்லை.

மேலும்., ஜெயலலிதாவினால் கொடுக்கப்பட்ட பசுமை வீடுகளை, அதே ஜெயலலிதா வின் ஆட்சியில் வழி நடக்கும் என்று ஆங்காங்கே பொதுக்கூட்டம் மற்றும் அரசு விழாக்களில் மார் தட்டிக்கொள்ளும் அரசு, இது குறித்து நடவடிக்கை எடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், இந்த பாதிக்கப்பட்டு வரும் பசுமை வீட்டு பயனாளிகள் குறித்து, கரூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ வும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் எதாவது நல்லது செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
பேட்டி : சுமதி – கடம்பங்குறிச்சி - மண்மங்கலம் வட்டம் – கரூர் மாவட்டம்
குப்புசாமி – கடம்பங்குறிச்சி – மண்மங்கலம் வட்டம் – கரூர் மாவட்டம்