நபிகள் நாயகம் கடைசி இறைதூதர் இல்லை… பெண் தலைமையாசிரியருக்கு மரண தண்டனை!
பாகிஸ்தானில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சொன்ன பெண் தலைமையாசிரியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள தனியார் பள்ளியின் தலைமையாசிரியாக பணியாற்றி வந்தவர் தன்வீர் என்ற பெண். இவர் மாணவர்களிடம் நபிகள் நாயகம் கடைசி இறைத்தூதர் இல்லை என்றும் தான்தான் கடைசி இறைத்தூதர் என்றும் பேசியுள்ளார். இது சர்ச்சைகளைக் கிளப்பவே அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட்டது.
அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தன்வீர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என சொன்னபோதும் அதற்கான ஆதாரங்கள் இல்லை என நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அவருக்கு நீதிமன்றம் தெய்வ நிந்தனை பிரிவின் கீழ் மரண தண்டனை விதித்துள்ளது.