1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (17:20 IST)

ராமர் கோவிலுக்கு வெளியே குத்தாட்டம்: இளம்பெண் மீது வழக்கு!

ராமர் கோவிலுக்கு வெளியே குத்தாட்டம்: இளம்பெண் மீது வழக்கு!
ராமர் கோவிலுக்கு வெளியே குத்தாட்டம் போட்ட இளம்பெண் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சத்தர்பூர் என்ற மாவட்டத்தில் உள்ள ராமர் கோவில் மிகவும் புனிதமானது என அந்த பகுதி மக்கள் கருதி வருகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அந்த கோயிலில் வழிபாடு நடத்தி வரும் நிலையில் அந்த கோவிலுக்கு வெளியே சினிமா பாடலுக்கு இளம்பெண் ஒருவர் நடனமாடி வீடியோ எடுத்து அந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவு செய்தார்
 
இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மத உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்று ராமர் கோவிலுக்கு வெளியே நடனமாடி இருப்பதாக அளித்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது