திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2024 (17:28 IST)

எங்கள் நாட்டு எண்ணமும் காங்கிரஸ் எண்ணமும் ஒன்று தான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

பாகிஸ்தான் நாட்டின் எண்ணமும் இந்தியாவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் எண்ணமும் ஒன்றுதான் என பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முதல் கட்ட தேர்தல் நேற்று முடிந்தது. இரண்டாவது கட்டத் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று பேரணி நடத்த உள்ளார். 
 
இந்த நிலையில், காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆட்சியைப் பிடித்தால் 370 சட்டப்பிரிவு மீண்டும் கொண்டு வருவோம் என ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வந்தாலும், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் 370 சட்டப்பிரிவு குறித்து எதுவும் கூறவில்லை. 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று 370 பிரிவை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும், பாகிஸ்தானைப் போலவே காங்கிரஸ் கூட்டணி கட்சியின் கொள்கையும் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva