1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2024 (14:37 IST)

காங்கிரஸ் என்ற நாயை புதைத்து விடுவேன்! சிவசேனை எம்எல்ஏவின் அடுத்த சர்ச்சை!

சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் காங்கிரஸ் என்ற நாயை புதைத்து விடுவேன் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
 
சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘என் நிகழ்வில் காங்கிரஸ் நாய் வர முயன்றால், அவர்களை அங்கேயே புதைத்துவிடுவேன்" என பேசினார். மேலும் அவர் ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு எதிராக தானே முடிவு எடுத்ததாகவும், இதற்காக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.
 
ஏற்கனவே இவர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக பேசியதற்காக, அவருடைய நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ. 11 லட்சம் வெகுமதி வழங்குவேன் என அறிவித்தார். 
 
அவருடைய பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் காங்கிரஸ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் பேசியுள்ளார்.
 
இந்த காவல்துறையினர் சஞ்சய் கெய்க்வாட் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran