வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 23 டிசம்பர் 2024 (07:40 IST)

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Rain
தமிழ்நாட்டில் ஆறு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக  செங்கல்பட்டு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது,

வங்கக் கடலில் வாழை பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, அதன் பிறகு கடலில் படிப்படியாக வழுவழுக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஆறு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும்,

நாளை மறுநாள், அதாவது டிசம்பர் 25ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில், டிசம்பர் 26ஆம் தேதி மற்றும் டிசம்பர் 27ஆம் தேதியும் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகாலை வேளையில் சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited by Siva