1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (16:10 IST)

பேங்க் கொடுத்த தொல்லை.. சொந்த பணத்தை கொள்ளையடித்த பெண்!

robbery
வங்கியில் தன்னுடைய பணத்தை கொடுக்க அதிகாரிகள் மறுத்ததால் இளம்பெண் வங்கியை கொள்ளையடித்த சம்பவம் வைரலாகியுள்ளது.

கொள்ளை சம்பவங்கள் பல நாடுகளிலும் தொடர்ந்து வரும் நிலையில் வங்கிகளில் எப்போதும் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ள அந்தந்த நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் லெபனான் நாட்டில் நடந்த வங்கி கொள்ளை சம்பவம் ஒன்று மக்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

லெபனானை சேர்ந்த சலி ஹஃபிஸ் என்ற பெண் தனது மாத ஊதியத்தை வங்கியில் செலுத்தி சேமித்து வைத்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவரது சகோதரிக்கு கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதனால் தனது சகோதரியின் சிகிச்சைக்காக வங்கியில் இருந்து சேமிப்பு பணத்தை எடுக்க சென்றுள்ளார் ஹஃபிஸ். ஆனால் வங்கி அதிகாரிகள் ஒரு மாதத்திற்கு 200 டாலர்கள் மட்டுமே எடுக்க முடியும் என கூறியுள்ளனர். தனது நிலையை அந்த பெண் எடுத்துக்கூறியும் அவர்கள் காதில் வாங்கவில்லை என தெரிகிறது.

இதனால் கோபமடைந்த அந்த பெண் பொம்மை துப்பாக்கி ஒன்றை எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்று கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் 13 ஆயிரம் டாலர்களை அவர் கொள்ளையடித்த போது போலீஸில் பிடிபட்டார். விசாரணையில் தனது சேமிப்பு தொகை வங்கியில் இருப்பதையும், அதை வங்கி அதிகாரிகள் தர மறுத்ததால் கொள்ளையடித்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.