திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (09:40 IST)

சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை: மேலும் ஒருவர் கைது!

arrested
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொள்ளையை தனிப்படை போலீசார் ஒரே வாரத்தில் குற்றவாளியை கண்டு பிடித்தனர் என்பதும் இந்த கொள்ளைக்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் ஒருவரே உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் கொள்ளை போன 32 கிலோ நகைகள் மீட்கப்பட்டு வங்கியிடம் ஒப்படைத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட இதே வங்கியில் உள்ள வேறொரு கிளையில் பணி செய்த முருகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்
 
இந்த நிலையில் தற்போது 8-வது நபராக வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த கேப்ரியல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கைதுசெய்யப்பட்ட கேப்ரியல் என்பவரிடம் தற்போது போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன