கேத் மிடில்டன் நிர்வாண புகைப்படம்: பிரபல பத்திரிக்கைக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 6 செப்டம்பர் 2017 (12:44 IST)
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டனுக்கு பிரபல பத்திரிக்கை ரூ. 1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 
கடந்த 2012 ஆம் ஆண்டு இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத் மிடில்டன் பிரான்ஸ் சென்றிருந்தனர். அங்கு இருவரும் கடற்கரையில் சூரிய குளியலில் ஈடுபட்டனர்.
 
அப்போது, பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்று கேத் மிடிலனின் அரை நிர்வாண புகைப்படம் எடுத்து, அவரது அனுமதியின்றி பத்திரிக்கையில் வெளியிட்டது. 
 
இதனால், அரசு குடும்பத்திற்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக கூறி,  இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதி மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தனர்.
 
கோர்ட்டில் விசாரணை நடந்து வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. அதில் இளவரசர் வில்லியம், இளவரசி கேத் மிடில்டன் தம்பதிக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என பத்திரிக்கை நிறுவனத்திற்கு உத்தரவிட்ப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :