ரோஹிங்யா இனப்படுகொலை: நெஞ்சை உறைய வைக்கும் புகைப்படம்


sivalingam| Last Modified திங்கள், 4 செப்டம்பர் 2017 (23:59 IST)
இதுவரை இல்லாத வகையில் மியான்மர் நாட்டில் முஸ்லிம்கள் மீது இனப்படுகொலையில் படுமோசமாக நடந்து வரும் நிலையில் இதுவரை சுமார் 90,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக மியான்மர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ராணுவம் மற்றும் புத்த மதத்தினர் இணைந்து இந்த படுகொலையை நடத்தி வருவதாகவும், இதற்கு முன் உலகை உலுக்கிய கொசாவோ, ஈழ இனப்படுகொலைகளை விட பத்து மடங்கு கொடூரமான படுகொலை இது என்றும் கூறப்படுகிறது.


 
 
.ஜனநாயக ஆட்சியை மலரச் செய்த சூகி ஆதரவு பெற்ற ஆட்சியில் இப்படி ஒரு இனப்படுகொலையா? என உலக நாடுகள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மியான்மரை விட்டு முஸ்லீம்கள் வெளியேறும், மற்றும் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இவற்றில் ஒன்று ஒரு பச்சிளங்குழந்தை சகதியில் குப்புற கவிழ்ந்து கிடக்கும் காட்சி கல்நெஞ்சையும் கறைய வைக்கும் நிலையில் நெஞ்சையே உறைய  வைத்துள்ளது.
 
இந்த நிலையில் ரோஹிங்யோ இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்த ஐநா உத்தரவிட்டுள்ளது என்பது மட்டுமே இந்நாட்டில் வாழும் முஸ்லீம்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி ஆகும்


இதில் மேலும் படிக்கவும் :