அகோரியை போன்று மோகன்லால் கெட்டப் வைரலாகும் புகைப்படம்

Sasikala| Last Modified செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (12:06 IST)
மோகன்லால் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார். இவர் தற்போது ஒடியன் (Odiyan) என்ற படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்தில் மஞ்சு வாரியர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

 
மணிரத்னம் இயக்கத்தில் 20 வருடங்களுக்கு முன்னர் வெளியான படம் `இருவர்'. மோகன்லால், பிரகாஷ் ராஜ், நாசர், ஐஸ்வர்யா  ராய், தபு, கௌதமி உள்ளிட்ட பலரும் நடித்து அரசியல் பின்னணியில் உருவாகிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை  பெற்றது. 
 
இந்நிலையில். மோகன்லால்-பிரகாஷ்ராஜ் இணைந்து மலையாளத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். `ஒடியன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீகுமார் இயக்குகிறார். இப்படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக பிரகாஷ்  ராஜ்  நடிக்க உள்ளார்.
 
தற்போது இப்படத்தில் இவரின் கெட்டப்பை பார்த்த பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர், காசியில் சாமியர் கெட்டப் அதாவது அகோரி  போல் காட்சியளிக்கும் ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது. இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது. இப்புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.


இதில் மேலும் படிக்கவும் :