வீட்டுக்குள் 45 விஷ பாம்புகள் : வீட்டுக்காரர் மரண பீதி :வைரலாகும் வீடியோ
அமெரிக்காவில் நாட்டில் டெக்ஸாசில் உள்ள அல்பனி என்ற பகுதியில் ஒரு நபர் வசித்து வருகிறார். தன் வீட்டில் கீழ் தளத்திற்கு இவர் எதேச்சையாகச் சென்றிருக்கிறார்.
இந்நிலையில் யாரும் துப்புறவு செய்யாமல் இருந்ததால் அந்த அறையில் மிகுந்த அழுக்கேறியதாக இருந்துள்ளது. அங்க்லிருந்த மின் கம்பிகளை பரிசோதனை செய்வதற்காக அந்நபர் சென்றுள்ளர்.
ஆனால் சுத்தம் செய்யப்படாத அவ்விடத்தில் கொடிய விஷமுள்ள பாம்புகள் இருந்ததைக் கண்டு மிகுந்த அச்சம் கொண்டிருகிறார். அதன் பின்னர் அவர் பாம்பு பிடிக்கும் மையத்துக்கு இதுபற்றி தகவல் கொடுத்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து பாம்பு பிடிப்பவர்கள் வந்து வீட்டில் பார்த்த போது மொத்தம் 45 பாம்புகள் இருந்ததைக் கண்டு அச்சம் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவற்றை எல்லாம் பிடித்துச் சென்றுவிட்டனர். வீட்டின் உரிமையாளர் பாம்புகள் நடமாட்ட்டம் குறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகியுள்ளது.
https://nowthisnews.com/videos/news/texas-homeowner-finds-45-rattlesnakes-living-under-his-house?jwsource=cl