1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 26 டிசம்பர் 2024 (11:32 IST)

சென்னை புத்தகக் கண்காட்சி: நாளை தொடங்கி வைக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் டிசம்பர் 27ஆம் தேதி முதல் புத்தக கண்காட்சி தொடங்கி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையில் புத்தக கண்காட்சியை தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் நடத்தப்பட்டு வரும் புத்தக கண்காட்சி இந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 48வது புத்தக கண்காட்சியை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

மேலும், தொடக்க நாள் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் தொடங்க இருக்கும் இந்த புத்தக கண்காட்சி ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 900 அரங்குகள் இடம் பெற்றுள்ள இந்த புத்தக கண்காட்சி வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8:30 மணி வரை, விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரங்கங்களிலும் 10% சலுகை விலையில் புத்தகங்களை விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva