வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

சுவை மிகுந்த தஹி பூரி செய்ய!!

வட மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு வகையான இந்த சுவையான தயிர் பூரிகளை செய்வது சுலபமானது. வீட்டிலேயே செய்து உங்கள் குடும்பத்தினரை குதூகலப்படுத்த ஏற்ற ரெசிப்பி. இதை எவ்வாறு செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
 
குட்டி பூரிகள் - 10 (ரெடிமேட்டாலவும் கடைகளில் கிடைக்கும்) 
தயிர் - ஒரு கப்
உப்பு, சர்க்கரை, சாட் மசாலா பொடி - தேவையான அளவு 
உருளைக்கிழங்கு - , 
காய்ந்த பட்டாணி - கால் கப் 
ஸ்வீட் சட்னி - 10 டீஸ்பூன் 
ஓமப்பொடி - தேவையான அளவு
செய்முறை:
 
பட்டாணியை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் வேக வைக்கவும். குட்டி பூரிகளை வரிசையாக தட்டில் அடுக்கவும். தயிருடன் உப்பு,  சர்க்கரை, சாட் மசாலா பொடி சேர்த்துக் கலக்கவும்.
 
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து உதிர்க்கவும். பூரியின் மேல் பகுதியில் ஓட்டை போட்டு தயிர் கலவை, சிறிதளவு உருளைக் கிழங்கு, பட்டாணி, ஸ்வீட் சட்னி விட்டு பூரியை நிரப்பி, மேலே ஓமப்பொடியை தூவி பரிமாறவும். சுவையான தஹி பூரி தயார்.