செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 நவம்பர் 2023 (09:38 IST)

கசப்பு இல்லாத பாகற்காய் சாம்பார் செய்வது எப்படி?

Pavakkai Sambar
பாகற்காயில் பல நோய்களையும் எதிர்க்கும் பண்பு உள்ளது. பாகற்காய் கசப்பாய் இருப்பதால் பலரும் சாப்பிட விரும்புவதில்லை. பாகற்காயை வைத்து சுவையான சாம்பார் எப்படி செய்யலாம் என பார்ப்போம்.


  • தேவையான பொருட்கள்: பாகற்காய், துவரம் பருப்பு, கடலை பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம், தேங்காய் துறுவல், புளி, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை.
  • முதலில் பாகற்காயை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வைக்க வேண்டும்.
  • கடலை பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம், தேங்காய் துறுவல் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு நன்றாக தாளித்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் பாகற்காய் துண்டுகளை போட்டு சுருள வதக்க வேண்டும்.
  • பின்னர் அதில் புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • நல்ல கொதி வந்த பிறகு அரைத்த கலவை மற்றும் வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து சிறிது கொதிக்க விட வேண்டும்.
  • பின்னர் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ஆரோக்கியமான பாகற்காய் சாம்பார் தயார்.