சத்தான சிறுதானிய புட்டு செய்ய.....!!

Sasikala|
புட்டு மாவு தயார் செய்ய தேவையான பொருட்கள்:
 
திணை - 1 கப்
சாமை - 1 கப்
வரகு - 1 கப்
குதிரைவாலி - 1 கப்
கேழ்வரகு - 1 கப்
கம்பு - 1 கப்
சோளம் - 1 கப்
 
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை தனிதனியாக வெறும் வாணலியில் போட்டு நன்கு வாசனை வரும்வரை வறுக்கவும். பின் அதனை ஆறவைத்து மாவு மிதினில் கொடுத்தோ அல்லது மிக்ஸியிலோ அரைத்து கொள்ளவும்.
செய்முறை:
 
சிறுதானிய புட்டு மாவு  - 1 கப்
தேங்காய் - 1/2 மூடி
நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய் - 3 (பொடித்தது)
தண்ணீர் - தேவையான அளவு
 
தேவையான அளவு தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து கரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். ஏலக்காயை  பொடித்துக் கொள்ளவும்.
 
ஒரு பாத்திரத்தில் சிறுதானியப் புட்டு மாவை போட்டு அதனுடன் உப்பு கலந்த தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து கட்டி விழாமல் உதிரியாகவும், ஈரப்பதத்துடனும் இருக்குமாறு செய்யவேண்டும்.
 
பின்னர் ஈரப்பதமான மாவினை ஒன்றுபோல் அழுத்திவிட்டு துணியால் மூடி பத்து நிமிடம் வைக்கவும். பின் புட்டு மாவினை இட்லிப்  பாத்திரத்தில் வைத்து வேகவைக்கவும். வெந்த புட்டு மாவினை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் நாட்டு சர்க்கரை, தேங்காய்  துருவல், ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும். சுவையான சிறுதானிய புட்டு தயார்.
 
குறிப்பு: சிறுதானிய புட்டில் நாட்டு சர்க்கரைக்கு பதிலாக மண்டை வெல்லத்தை கலந்தும் புட்டு தயார் செய்யலாம்.


இதில் மேலும் படிக்கவும் :