புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

உடலுக்கு ஆரோக்கியம் தரும் சீரக குழம்பு செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
புளித்தண்ணீர் - புளியின் கரைசல் (ஒரு எலுமிச்சை அளவு) 
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 56 பல்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -  கால் டீஸ்பூன்
வெல்லம் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
எண்ணெய் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
கடுகு  - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை

செய்முறை:
 
அடுப்பில் ஒரு கடாயில் சீரகத்தை வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளுவும். புளியை பத்து நிமிடம் ஊறவைத்து, அதனை சாறு எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும், பூண்டுப் பல்லை தோல் உரித்தும் வைத்துக்  கொள்ளுங்கள்.
 
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை பெருங்காயம் சேர்த்து வதக்குங்கள். நறுக்கிய  வெங்காயம், தோல் உரித்த பூண்டு பல்லைச் சேர்த்து மூன்று நிமிடம் வதக்குங்கள்.


பிறகு சாம்பார் பொடி மற்றும் மஞ்சள் தூளைச் சேர்த்து வதக்கி, புளித்தண்ணீரை  ஊற்றி, பச்சை வாசனை போனதும் அரைத்த சீரகப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். நன்கு கொதித்ததும் அடுப்பை மிதமாக்கி சிறிது வெல்லத்தை  சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். ஆரோக்கியம் தரும் சீரக குழம்பு தயார்.