1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
அரிசி மாவு - 1 கப்
கடலை மாவு - 1/2 கப்
பொட்டுக் கடலை மாவு - 1/2 கப்
மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி
நெய் - 2 மேஜைக்கரண்டி
பெருங்காயத் தூள் - சிறிதளவு
ஓமம் - 1/2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
 
அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக் கடலை மாவு மூன்றையும் தனித்தனியாக சல்லடையில் சலித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக் கடலை மாவு ஒன்றாக சேர்த்து அதனுடன் சிறுது தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பாதத்திற்கு மிருதுவான  மாவாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து முறுக்கு குழாயில் ரிப்பன் அச்சை போட்டு பிசைந்த மாவை குழாய் கொள்ளும் அளவுக்கு நிரப்பி வட்டமாக பிழிந்து விடவும்.
 
ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும். மறுபுறமும் வெந்ததும் எடுத்து ஒரு டிஸ்யு பேப்பரில் வைக்கவும். எண்ணெய் உறிஞ்சியவுடன் சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். டீயுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.