ருசியான முள்ளங்கி துவையல் செய்வது எப்படி...?
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி - 1 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
கடலை பருப்பு - 1 மேஜைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - சிறிது
செய்முறை:
முள்ளங்கியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். தேவையான இதரப் பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் நறுக்கிய முள்ளங்கி சேர்த்து சுமார் 5 நிமிடம் பொன்னிறம் ஆகும் வரை நன்கு வதக்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போடவும். அத்துடன் சீரகம் சேர்த்து பொரியவிடவும். பின்னர் அதில் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். அத்துடன் தேங்காய் துருவல், புளி சேர்த்து 1 நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
மிக்சியில் முதலில் தேங்காய் துருவல் கலவையை கரகரப்பாக அரைக்கவும். அதன்பின்னர் முள்ளங்கியை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த துவையலில் கொட்டிக் கிளறவும். இப்போது ருசியான முள்ளங்கி துவையல் தயார்.