புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. பட்ஜெட் 2018-19
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 14 நவம்பர் 2017 (18:20 IST)

ஜிஎஸ்டிக்கு பின் வெளியாகும் முதல் பட்ஜெட்

2018-2019 நிதியாண்டிற்கான பட்ஜெட் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு பின் முதல் பட்ஜெட் என்பதால் அனவரும் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.


 

 
150 ஆண்டு கால மரபை உடைத்து தற்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசு நிதியாண்டை ஜனவரி-டிசம்பர் காலமாக மாற்றியுள்ளது. அதன்படி பட்ஜெட் தொடர்பான் கூட்டத் தொடர் இந்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
 
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன் வெளியாகும் முதல் பட்ஜெட் என்பதால் அனைவரிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
 
பணமதப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவின் சந்தை மதிப்பு சரிவை கண்டது. இந்திய பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது. இதனால் இந்த முறை பட்ஜெட் அதிரயாக இருக்கும் என கூறப்படுகிறது. 
 
அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெரும்பாலான பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டது. 50 பொருட்களுக்கு மட்டுமே தற்போது 28% வரி விதிக்கப்படுகிறது. தற்போது 2018-2019 நிதியாண்டிற்கான வெளியாகும் பட்ஜெட்டில் வரி விகிதத்தில் மீண்டும் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.