1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 10 நவம்பர் 2017 (15:08 IST)

50 பொருட்களுக்கு மட்டுமே 28% ஜிஎஸ்டி வரி!

கவுகாத்தியில் இன்று நடைபெற்ற 50 பொருட்களுக்கு மட்டும் 28% ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்க கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


 

 
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் 177 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. 50 பொருட்களுக்கு மட்டும் 28% ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரேசன் கடைகளுக்குச் செலுத்தப்படும் கமிஷன் மீதான வரி முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
சிகரெட், ஆடம்பர பொருட்கள் உள்ளிட்ட 50 பொருட்கள் மீது மட்டும் 28% ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்க கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜெட்லி மாலை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.