புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வெள்ளி, 26 அக்டோபர் 2018 (09:25 IST)

ஸ்லீப்பர்செல்கள் வெளியே வருவது எப்போது? தங்கத்தமிழ்ச்செல்வன் அதிரடி தகவல்

அதிமுக எம்.எல்.ஏக்களில் சிலர் எங்களுடைய ஸ்லீப்பர் செல்களாக இருப்பதாகவும், அவர்கள் தக்க நேரத்தில் வெளியே வருவார்கள் என்று தினகரனும் அவருடைய ஆதரவாளர்களும் கூறி வரும் நிலையில் இன்று எடுக்கக்கூடிய முடிவுக்கு பின்னர் ஸ்லீப்பர்செல்கள் வெளியே வர வாய்ப்பு இருப்பதாக தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புக்கு பின்னர் இன்று தினகரனும் பதவி இழந்த 18 எம்.எல்.ஏக்களும் மதுரையில் ஆலோசனை செய்யவுள்ளனர். இந்த ஆலோசனையில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? அப்பீல் செய்வதா? அல்லது மக்கள் மன்றத்தை சந்திப்பதா? என்பது குறித்த முடிவு எடுக்கப்படும் என்று தங்கத்தமிழ்ச்செல்வன்  பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

மேலும் அதிமுகவில் உள்ள தங்களுடைய ஸ்லீப்பர்செல்கள் இன்று நாங்கள் எடுக்கும் முடிவுக்கு பின்னர் வெளியே வர வாய்ப்பு உள்ளதாகவும் தங்கத்தமிழ்ச்செல்வன் கூறினார். ஸ்லீப்பர் செல்கள் வெளியே வந்து தினகரனுக்கு ஆதரவும், ஆட்சிக்கு நெருக்கடியும் கொடுப்பார்களா? என்பதி பொறுத்திருந்து பார்ப்போம்