இன்று காலை 10.30 மணி: அதிமுக எம்.எல்.ஏக்களும், அஜித் ரசிகர்களும்
இன்று காலை 10.30 மணிக்கு அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படத்தின் இரண்டாவது லுக் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நேரத்தை நோக்கி அஜித் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் அதே 10.30 மணிக்கு தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவாளர்கள் 18 எம்.எல்.ஏக்களின் வழக்கின் தீர்ப்பும் வெளிவரவுள்ளதாக சென்னை ஐகோர்ட் அறிவிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் ஒரு வழக்கின் தீர்ப்பும், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் செகண்ட்லுக்கும் ஒரே நேரத்தில் வெளிவரவுள்ளதால் இன்று காலை 10.30 மணிக்கு சமூக வலைத்தளங்கள் அதிரும் என எதிர்பார்க்கப்படுகிறது