1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 7 அக்டோபர் 2017 (11:12 IST)

நான் ஒருவரை விரும்பவும், வெறுக்கவும் நீங்கள் முடிவு செய்ய முடியாது: காயத்ரி ட்வீட்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஓவியா. அதே ரசிகர்களால் நிகழ்ச்சியில் மிகவும் மோசமாக வெறுக்கப்பட்டவர் காயத்ரி. இவர்கள் இருவரும் இறுதி நாளில் கூட சரியாக பேசவில்லை.

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் நடிகை ஓவியா தனிமைப்படுத்தப்பட்டு வந்தார். இதனால் ஓவியாவிற்கு எதிராக கடுமையாக பேசிய ஜூலி, காயத்ரி மற்றும் சக்தி ஆகியோர் மீது பார்வையாளர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். இதனை  தொடர்ந்து அவரது தீவிர ரசிகர்கள் இணையத்தை அலறவிட்டு வந்தனர். ஓவியாவிற்கு ஆதரவு தெரிவித்து, ஓவியா ஆர்மி  மற்றும் ஹேஷ் டேக் உருவாக்கி அதனை ட்ரெண்ட் ஆக்கினார்கள்.

 
இந்நிலையில் தற்போது ஓவியா ரசிகர்கள், காயத்ரியிடம் அவரை பற்றி ஏதாவது கூறுங்கள் என்று நிறைய பேர் டுவிட் செய்தனராம். இதற்கு பதிலளிக்கும் விதமாக காயத்ரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நான் ஒருவரை விரும்பவும்,  வெறுக்கவும் நீங்கள் முடிவு செய்ய முடியாது. அது உங்களுக்கும் பொருந்தும், நான் அதை மதிக்கிறேன். உங்களுக்கு என்னை  பின் தொடர்வதை நிறுத்த வாய்ப்பு இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.