பிக்பாஸ் சீசன் 2 தொகுத்து வழங்கப்போவது யார் தெரியுமா?

Sasikala| Last Modified வெள்ளி, 6 அக்டோபர் 2017 (17:31 IST)
பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிவுற்ற நிலையில் அடுத்த சீசனை தொகுத்து வழங்குபவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் பிக்பாஸ் சிசன் 2 அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி 100 நாட்கள் நிறைவடைந்து, ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருந்தது. மூலு பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் பிரபலமடைந்ததோடு,  விளம்பர வாய்ப்புகளும், பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.  
 
இந்நிலையில் மிக விரைவில் பிக்பாஸ் ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதனை சூர்யா தொகுத்து வழங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால் சூர்யா தரப்பினர் இந்த செய்தியை மறுத்துள்ளனர். அவர் தற்போது படங்களில் பிசியாக உள்ளதாக தெரிவித்தனர். எனவே பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை சூர்யா தொகுத்து வழங்கவுள்ளதாக வெளிவந்த செய்தியில்  உண்மையில்லை' என்று கூறியுள்ளனர்.
 
தற்போது நடிகர் அரவிந்த் சாமி பிக்பாஸ் சீசன் 2-வை தொகுத்து வழங்குவார் எனவும் கூறப்படுகிறது. பிக்பாஸ் சீசன் 2 குறித்த அறிவிப்பை விரைவில் பிக்பாஸ் தயாரிப்பு குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :